வியாழன், ஏப்ரல் 25, 2013

தமிழக முஸ்லிம் இளைஞர்கள் கைது! இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு!

பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் வாழும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தவேண்டும் என தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட பைக் மூலம் கடந்த 17ம் தேதி குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் 10 க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக தனிப்படையினர் தமிழக போலீசார் உதவியுடன் நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த இளைஞர்களை கைது செய்து பெங்களூர் அழைத்து சென்றனர். மேலும் கிச்சான் புகாரி என்ற இளைஞரையும் கைது செய்தனர். இவர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளிலிருந்து விடுதலை பெற்று, தற்போது இவர் சிறையிலிருந்து விடுதலையாகும் அப்பாவி இளைஞர்களின் மறுவாழ்விற்காக உதவி செய்து வருகிறார்.
மேலும் இக்குண்டுவெடிப்பு தொடர்பாக தென்காசி, குமரி, பெரியப்பட்டினம், மண்ணடி பகுதிகளை சார்ந்த முஸ்லிம் இளைஞர்களும் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வரும் செயலை காவல்துறை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் கோவை, நீலகிரி, குமரி மாவட்டங்களில் அரசியல் ஆதாயத்திற்காக பாஜக வினரால் செய்யப்பட்டு வரும் சூழ்ச்சியினை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதன் மூலம் மக்களிடையே கலவரத்தை ஏற்ப்படுத்த நினைக்கும் சக்திகளை இணங்கண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சந்திப்பில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஹனீபா தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட், தமுமுக, எஸ்டிபிஐ, ஐஎன்டிஜே உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக