வெள்ளி, ஏப்ரல் 19, 2013

சஞ்சய் தத்தை தொடர்ந்து சைபுன்னிஷா உள்ளிட்ட நால்வருக்கும் சரணடைய அவகாசம்!

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்திற்கு சரணடைய 4 வாரங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று சைபுன்னிஸா உள்ளிட்டோருக்கும் 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கீழ்கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து கடந்த மாதம் 21 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜாமீனில் இருந்த குற்றவாளிகள், தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவிக்க 4 வார காலத்தில் போலீசில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த கால அவகாசம் ஏப்ரல் இன்றுடன் (ஏப்ரல்-18) நிறைவடைகிறது. இந்நிலையில், சரண் அடைய கூடுதல் அவகாசம் வேண்டி தண்டனை பெற்றவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
நடிகர் சஞ்சய்தத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 வாரங்கள் கூடுதலாக அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கிடையே இதே வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் சைபுன்னிஷா, அல்தாஃப் அலி, ஈஷா மேனன், யூசுப் நால்வா ஆகியோர் சரண் அடைய கூடுதல் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்தனர். நேற்று அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது அவர்கள் மூன்று பேருக்கும் கூடுதலாக 4 வார காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக