வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் சாவேஷின் சோஷலிச கட்சியை சேர்ந்த நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
வெனிசுலா அதிபராக இருந்த சாவேஸின் மறைவை அடுத்து, அந்நாட்டுக்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது. 80 சதவிகித மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில், 50.7 சதவிகித வாக்குகள் பெற்று நிகோலஸ் மதுரோ அதிபர் ஆனார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிக் கேப்ரியல்ஸ் 49.1 சதவிகித வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தலைநகர் கராகாஸில் தமது ஆதரவாளர்களிடையே பேசிய நிக்கோலஸ் மதுரோ, இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோ மறைந்த ஹியூகோ சாவேஸின் தீவிர ஆதரவாளர். 45 வயதான நிக்கோலஸ் மதுரோ, அந்நாட்டு துணை அதிபராக இருந்து வந்தார். பேருந்து ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய நிக்கோலஸ் மதுரோ, பின்னர் அரசியலில் ஈடுபட்டு, அந் நாட்டுக்கே அதிபராகியுள்ளார்.
நன்றி : நியூ இந்திய
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக