வெள்ளி, ஏப்ரல் 26, 2013

இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் ! பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !

  • பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது !

    இதே தியேட்டரில் எத்தனையோ முறை கை தட்டல் விசில் ஆகியவற்றைக் கேட்டுள்ளேன் ! அல்லாஹு அக்பர் எனும் குரல் ஒலித்த போது சிலிர்த்தேன் ! ஆடல் பாடல் இல்லாத , நட்சதிரப்பட்டாளம் இல்லாத ஒரு ஆவணப்படத்திற்கு கை தட்டல் வாங்க முடியும் என்பதை இன்றைக்கு பார்த்த போது உண்மையிலேயே இதை இயக்கிய சிபிச்சந்தரை பாராட்டுகிறேன்.
    ஏன் எனில் நான் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்துள்ளார் !

    இந்தக் படக் குழுவினரோடு இந்த மேடையில் நிற்க வெட்கப்படுகிறேன்! ஏன் என்றால் 10 ஆண்டுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்தும் நாங்கள் செய்யாத வேலையை இவர்கள் செய்துள்ளார்கள் ! இந்த ஆவணப்படத்தின் போக்கை திசை மாற்றியவன் என்று சொன்னார்கள் ! உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை 'இந்த இடத்திற்கு இப்படிப் போகக் கூடாது இப்படிப் போகணும்' என்று அட்ரஸ் சொன்னத்ற்கே இந்த மேடையில் இவ்வளவு கண்ணியம் என்றால் உண்மையிலேயே ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்நேரம் இது போன்று இஸ்லாத்தை சொல்லும் ஆவணப்படங்கள் எத்தனையோ வந்திருக்கும் என ஆதங்கப்பட்டார் !

    - நன்றி - Sengis Khan 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக