- மலேசியாவில் மே 5ம் தேதி நடக்கவிருக்கும் 13வது பொதுத் தேர்தலில் போட்டி யிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களை ஆளும் தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
- மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் வழக்கம் போல பாஹாங்கில் உள்ள பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். மஇகா தலைவர் ஜி.பழனிவேல் கேமரன் ஹைலண்ட்ஸ் தொகுதி யில் போட்டியிடுகிறார். பாஹாங் மாநிலத்தில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அம்மாநிலத்தின் தேசிய முன்னணித் தலைவர் அட்னன் யாகூப் நேற்று அறிவித்தார்.
- நஜிப்பின் அரசியல் செயலாளர் சுஃபியன் அவாங் குவாந்தானிலும் ஜெரன்டட் அம்னோ தகவல் பிரிவின் தலைவர் அகமது நஸ்லான் இட்ரிஸ் ஜெரன்டட் நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர். குவாந்தான் அம்னோ தலைவர் வான் அட்னன் வான் மாமட் இண்டிரா மகோட்டா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் அங்கு மகத்தான வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.
புதன், ஏப்ரல் 17, 2013
மலேசியா: பெக்கான் தொகுதியில் போட்டியிடுகிறார் நஜிப் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக