செவ்வாய், ஏப்ரல் 30, 2013

காங்கிரஸ் கட்சிக்கு மோடி பிரச்சனையே அல்ல! - திக்விஜய்சிங்!

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு பிரச்சனையே அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார்.
இதுத் தொடர்பாக செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறும்போது; “அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக போட்டி போடுவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. தனி நபர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் உடன்பாடு இல்லை. அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு நரேந்திர மோடி ஒரு பிரச்னையே அல்ல.
தாம் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மோடி கூறி வருகிறார். ஆனால், எந்த ஒரு துறையும் முதலிடத்தைப் பிடிக்கவில்லை. மோடிக்கு தேசிய அளவில் ஆதரவு இருப்பது போன்ற ஒரு மாயை ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதை மோடிக்கும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் இடையிலான போட்டியாகக் கருத முடியாது. கடந்த 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் மாநிலம் சூறையாடப்பட்டதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.காங்கிரஸ் கட்சிக்காக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் பலனாக 2004 மற்றும் 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மாநில அளவிலான தேர்தல்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று வருகிறது.” என்றார் திக் விஜய் சிங்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக