திங்கள், ஏப்ரல் 22, 2013

வடகொரியா மேலும் 2 ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது!: அலறும் தென்கொரியா!

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடலோரப் பகுதியில் வடகொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை நிலை நிறுத்தியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது. ஏற்கனவே நிலை நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத ஏவுகணையை, வடகொரியாவின் நிறுவனர் கிம் ஈ சுங்கின் பிறந்த நாளான ஏப்ரல் 15ம் திகதி அன்று வட கொரியா ஏவும் என்று தென்கொரியாவால் எதிர்பார்க்கப்பட்ட தாக்குதல் பொய்த்துப் போனது.
இந்நிலையில், வடகொரியா ‘ஸ்கட்’ ரக ஏவுகணைகளை தெற்கு ஹேம்கியாங் பகுதியில் நிலை நிறுத்தியுள்ளதாக தென்கொரியா இன்று தெரிவித்துள்ளது. வட கொரியாவின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்காவுடன் இணைந்து தென் கொரியா தீவிரமாக கண்காணித்து வருகின்றது.
மேலும் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவின் ராணுவம் தனியாக பிரிந்து அமைக்கப்பட்ட நாள் ஏப்ரல் 25. இதனால் வருகின்ற 25ம் திகதி ஏவுகணை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டிருக்கலாம் என்று தென்கொரிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக