செவ்வாய், ஏப்ரல் 16, 2013

தங்கம் விலை மேலும் குறைவு மக்கள் மகிழ்ச்சி !

  • தங்கத்தின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்றே நாட்கள் சவரனுக்கு ரூ 2008 குறைந்து, ரூ 20075-க்கு விற்பனையாகிறது. 
  •  
  • சர்வதேச நிலவரப்படி வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று கூறப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களோ மகிழ்ச்சியுடன் நகைக்கடைகளில் குவிய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் முக முக்கியமான பொருளாகிவிட்டது. கடந்த 1982-ம் ஆண்டு இந்தியாவில் தங்கத்தின் தேவை 65 டன்னாக இருந்தது. காலப்போக்கில் தங்கத்தின் மீதான மோகம் மக்களிடம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது இந்தியாவில் தங்கத்தின் தேவை 500 டன்னுக்கும் மேலாக இருந்து வருகிறது.
  •  
  •  இந்தியாவில் தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். இந்தநிலையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி, 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக மத்திய அரசு திடீரென்று உயர்த்தி அறிவித்தது. இதன் காரணமாக தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்தது. அப்போது தங்கத்தின் விலை குறைவதற்கு சாத்தியமில்லை என்று நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக