செவ்வாய், ஏப்ரல் 30, 2013

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு! குற்றவாளியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான ராஜேந்திர சவுத்ரி என்ற பஹல்வானின் ஜாமீன் மனுவை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது.

இவ்வழக்கில் சவுத்ரி மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் கால அவகாசத்தை 90 தினங்களில் இருந்து 180 தினங்களாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
குண்டுவெடிப்பில் தனக்கு எதிராக ஆதாரம் இல்லை என்றும் 90 நாட்கள் கஸ்டடி மார்ச் 19-ஆம் தேதி முடிவடைந்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டி சவுத்ரி ஜாமீன் மனுவில் கோரியிருந்தான். ஆனால், ஜாமீன் வழங்க என்.ஐ.ஏ எதிர்ப்பு தெரிவித்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் என்.ஐ.ஏவின் கோரிக்கையையும் நீதிமன்றம் அங்கீகரித்தது.
கடந்த டிசம்பர் மாதம் ராஜேந்திர சவுத்ரி கைது செய்யப்பட்டான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பெண்களும், குழந்தைகளும் உள்பட 68 பேர் கொல்லப்பட்டனர். 12 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக