வியாழன், ஏப்ரல் 25, 2013

குவாண்டனாமோ சிறையில் வலுவடையும் உண்ணாவிரதப் போராட்டம்!

  • பிரசித்திப் பெற்ற அமெரிக்க சிறைக்கூடமான குவாண்டனாமோவில் நடத்தும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் நடக்கும் கொடூர சித்திரவதைகளுக்கு எதிராக உணவு, பானங்களை துறந்து 52 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.இந்நிலையில் தற்போது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடும் கைதிகளின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்க ராணுவச் செய்தி தொடர்பாளர் சாமுவேல் ஹவுஸ் கூறுகிறார்.17 பேருக்கு ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக குழாய் மூலம் உணவை செலுத்துவதாகவும், ஐந்து பேரை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் ஹவுஸ் தெரிவிக்கிறார்.

    அமெரிக்காவின் கொடூரத்தை உலகிற்கு நிரூபிக்கும் கியூபாவில் உள்ள குவாண்டனாமோ சிறையில் 166 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சிறை அதிகாரிகள் தங்களின் புனித நூலான திருக்குர்ஆனை பறிக்க முயற்சிக்கின்றார்கள் என்று குற்றம் சாட்டி கடந்த பெப்ருவரி மாதம் உண்ணாவிரதப்போராட்டத்தை கைதிகள் துவக்கினர்.ஆனால், கைதிகளின் குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுக்கின்றனர். குற்றம் சுமத்தாமல், விசாரணையும் இல்லாமல் 11 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவம் தங்களை சித்திரவதைச் செய்வதாக கைதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.சுதந்திரமானவர்க
    ளாக மாறுவதற்கு மரணத்தை காத்திருப்பதாக குவாண்டானாமோ சிறையில் கைதிகள் கூறுவதை அல்ஜஸீரா வெளியிட்டிருந்தது.

    மனித உரிமை மீறல்களுக்கும், கொடிய சித்திரவதைகளுக்கு பிரசித்திப்பெற்றதுதான் அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை.ஆறு வருடங்களாக குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டிருந்த அல்ஜஸீராவின் செய்தியாளர் ஸமி அல்ஹஜ், சிறையில் அமெரிக்க ராணுவத்தின் கொடிய சித்திரவதைகளின் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருந்தார்.சில வேளைகளில் நாய்களை உபயோகிக்கின்றார்கள். சில வேளை கடுமையாக தாக்குகின்றார்கள்.சுவரில் தலையை மோதச் செய்கின்றார்கள்.ஆறு நாட்கள் தொடர்ந்து தூங்கவிடாமல் சித்திரவதைச் செய்கின்றார்கள் -இவையெல்லாம் 6 வருடங்களாக தான் குவாண்டானாமோ சிறையில் அனுபத்த சித்திரவதைகள் என்று ஸமி கூறுகிறார்.

    2011-ஆம் ஆண்டு இறுதியில் குவாண்டனாமோ சிறையை மூடுவேன் என்று வாய்ச்சவடால் விட்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, அதற்கு பிறகு இதுக் குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிபிடத்தக்கது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக