புதன், ஏப்ரல் 17, 2013

லெஃப்டு டு ரைட் – டிக்ளைன் ஆஃப் கம்யூனிஸம் இன் இந்தியா’- டெல்லியில் புதிய நூல் வெளியீடு!

புதுடெல்லி: டி.ஜி.ஜேக்கப் எழுதி எம்பவர் இந்தியா ப்ரஸ்(இ.ஐ.பி) வெளியீடான ’லெஃப்டு டு ரைட் – டிக்ளைன் ஆஃப் கம்யூனிஸம் இன் இந்தியா’ என்ற நூல் புதுடெல்லியில் வெளியிடப்பட்டது. இந்தியன் இஸ்லாமிக் கல்சுரல் செண்டரில் நாவலாசிரியரும், ஜாமிஆ ஹம்தர்த் பல்கலைக்கழக பேராசிரியருமான இஷ்தியாக் டானிஷ் நூலை வெளியிட்டார்.

நூலை வெளியிட்ட இஷ்தியாக் கூறுகையில்,’ இந்தியாவில் கம்யூனிசத்தின் உண்மையான நிலையை இந்நூல் அடிக்கோடிட்டு காண்பித்திருக்கிறது. ரஷ்யா, சீனா நாடுகளில் இருந்து கம்யூனிசத்தை அதே நிலையில் இந்தியாவில் இறக்குமதிச் செய்ய முயன்றதே இங்கு கம்யூனிஸத்தின் பரிதாபகரமான நிலைமைக்கு காரணம்’ என்று தெரிவித்தார்.
எம்பவர் இந்தியா ப்ரஸ்ஸின் மேலாண்மை இயக்குநரும், விடியல் வெள்ளி தமிழ் மாத இதழின் ஆசிரியருமான முஹம்மது இஸ்மாயீல் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் அசோசியட் எடிட்டர் அஸ்ஃபர் ஃபரீதி, என்.சி.ஹெச்.ஆர்.ஓ தேசிய செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் ஆகியோர் பங்கேற்றனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக