வெள்ளி, ஏப்ரல் 19, 2013

ஹிண்ட்ராஃபுடன் நஜிப் உடன்பாடு !

  • மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஹிண்ட்ராஃப் அமைப்புடன் புதிய உடன்பாடு செய்துள்ளார். மலேசிய இந்தியர்களின் நிலையை மேம்படுத்தும் வகையில் நான்கு முக்கியப் பகுதிகளில் இந்த உடன்பாடு கவனம் செலுத்துகிறது. இந்த ஐந்து ஆண்டு கால வரைவுத் திட்டத்தை அமலாக்குவதற்கான புரிந்துணர்வுத் திட்டத்தில் பிரதமர் நஜிப்பும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவர் பி. வேதமூர்த்தியும் கையெழுத்திட்டனர்.
  •  
  • இந்தப் புரிந்துணர்வுத் திட்டம் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் இருக்கும் விவேகானந்தா தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் நேற்று மாலை கையெழுத்திடப்பட்டது. புதிய வரைவுத் திட்டம் வேலை இழந்த இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவி வழங்குதல், குடியுரிமை இல்லாத இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்குதல், இந்தியர்களுக்குக் கல்வி மற்றும் வியாபார வாய்ப்புகள் வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
  •  
  • இந்த திட்டத்தை நாம் வரேவேர்ப்போம் ஆனால்
    ஹிண்ட்ராஃப் என்ற ஒரு அமைப்பு இதன் நோக்கம் என்ன போன்ற கேள்விகள் நமக்குள் உண்டு உலகத்தில் எந்த நாட்டிலும்இல்லாத சலுகைகள் ஹிந்து மக்களுக்கு மலேசியாவில் வழங்கப்பட்டு வருதுகோயில்களுக்கு மானியம் தமிழ் பேசக்கூடிய ஹிந்து மக்களுக்கு மலேசியாவில் முன்னுரிமை வழங்கப்படுது இப்படி இருக்க.
  •  
    ஹிண்ட்ராஃப் என்ற ஒரு காவி சிந்தனுடைய இயக்கம் பல பொய் பிரச்சாரங்களை செய்து கொண்டுவந்துள்ளது அது என்ன வென்றால் மலேசியாவில் வாழும் ஹிந்து மக்களுக்கு ஒரு சலுகைகளும் வழங்கவில்லை புறக்கனிக்கபடுது இதுப்போன்ற பல பொய் பிரச்சாரங்களை எடுத்து சொல்லி பல பதவிகளை அனுபவிக்க பாக்குது இந்த ஹிண்ட்ராப் இயக்கம் தலைவர்களும் செயல்வீரர்களும் இவர்களுக்கு இந்தியாவில் இயங்கிகொண்டிருக்கும் காவி தீவிரவாதம் இயக்கம்மான rss vhp பிஜேபி போன்ற இயக்கம் கட்சிகளின் முழு ஆதரவோடு பல திட்டங்களை போட்டு செயல்பட்டுகொண்டிருகின்றது.
  •  
  • இதில் வருத்தப்பட வேண்டிய ஒன்று இவர்களின் நோக்கம் என்ன என்று மலேசிய அரசாங்கம் கண்டுகொள்ளாமல் அவர்களின் செயல்களை கண்காணிக்காமல் இருப்பதே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக