- நீதிமன்ற தீர்ப்பு ஸ்டெர்லைட ஆலைக்கு ஆதரவாக வந்தால் எஸ்.டி.பி.ஐ கட்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெறும் போராட்டத்தை நடத்தும்.
1. தமிழகத்தில் தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்தை தொடா;ந்து வன்முறை மற்றும் பதட்டம் தொடர்ந்து வருகிறது. மரக்கோனம் தலித்துகள் மீது நடைபெற்ற வன்முறை கண்டிக்கத்தக்கது. மரக்கோணம் அருகே கூனிமேடு கிராமத்தில் முஸ்லீம்களின் கடைகளையும் வீடுகளையும் தாக்கி உள்ளார்கள். தொடரும் சாதிவெறி வன்முறையை காவல் துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். நடைபெற இருக்கின்ற தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்தின் ஜாதிவெறி தூண்ட படுகிறது இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
2. பல்வேறு மாநிலங்களிலிருந்து துரத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அனுமதிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இப்போது தற்காலிகமாக மாசு கட்டுபாடு வாரியத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மிக மோசமான பின் விளைவுகளை மக்களுக்கு ஏற்படுத்துவது மட்டுமின்றி சுற்றுசுழலையும் மாசுபடுத்துகின்றது, கடல்வளத்தையும் பாதிக்கின்றது. கடந்த மார்ச் 23ம் தேதி மக்களுக்கு எற்பட்ட பாதிப்பால் தற்போது மாசுகட்டுபாட்டு துறையின் அறிக்கையின் படி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் நீதிமன்ற தீர்ப்பு ஆலைக்கு ஆதரவாக வந்தால் எஸ்.டி.பி.ஐ கட்சி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பெறும் போராட்டத்தை நடத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
3. பெங்களுர்குண்டு வெடிப்பை காரணம் காட்டி தமிழக முஸ்லீம் இளைஞா;கள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டு இருக்கும் இளைஞர்கள் சமூக பணிகளிலும், சிறையில் இருக்கும் முஸ்லீம் இளைஞர்கள் விடுதலைக்காகவும் சட்ட ரீதியாக போராடி வந்தார்கள். மற்றும் காவல் துறையின் அராஜகத்திற்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார்கள். எனவே இவர்களை முடக்குவதற்காக திட்டமிட்டு கிச்சான் புகாரி உட்பட முஸ்லீம் இளைஞர்களை கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையின் விசாரனை மீது நம்பிக்கையில்லாததால் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்ந்து போராடும்.
4. தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலை அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப் படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் இன்னும் பணிகள் துவங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது தமிழக அரசு உடனடியாக நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மாநில தலைவர் தெரிவித்தார்
பேட்டியின் போது மாநில செயலாளர் அப்துல் சத்தார்,மாநில செயற்குழு உறுப்பினர் உஸ்மான்கான்,மாவட்ட தலைவர் காதர்முகைதீன்,செயலாளர் சமீர்,பொருளாளர் ஜாபர் மற்றும் அமுல்தீன், மைதீன் கனி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஞாயிறு, ஏப்ரல் 28, 2013
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பேட்டி !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக