பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல் வீரர்கள் " 21 பேர் ஆரோக்கியமான மக்கள் - வலிமையான தேசம்" என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல் வீரர்களை கண்ணூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது மட்டும் அல்லாமல கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம்(மார்க்சிஸ்ட் கட்சி) மையங்களில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றிய வேளைகளில் போலீசும், ஊடகங்களும் காண்பிக்காத வரம்புகடந்த ஆர்வமும், வேகத்தையும் அச்சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் கண்ணூர் நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச்செய்த மிகவும் சாதாரணமானதொரு சம்பவத்தில் வெளிப்படுத்துவது ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது.
கண்ணூரில் சில கட்சி மற்றும் அமைப்புகளின் அலுவலகங்களில் இருந்து வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றியபோது அந்த கட்சி மற்றும் அமைப்புகளின் மாநில தலைமையங்கள், அலுவலகங்கள், கீழ் மட்ட அலுவலகங்களில் சோதனை நடந்ததாக வரலாறு இல்லை.
ஆனால், குண்டுகள் எதுவும் எடுக்க படாத கண்ணூர் நாராத் சம்பவத்தின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில கமிட்டி அலுவலகம் முதல் உள்ளூர் அலுவலகங்கள் வரை சோதனை நடத்தி பீதிவயப்படுத்தி வருகிறது போலீஸ். கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமான முறையில் ஏற்கனவே போலீஸ் கடைப்பிடித்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியே நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கைதும், கடுமையான பிரிவுகளை சுமத்திய போலீசின் நடவடிக்கையுமாகும்.
மேலும் இந்த சம்பவத்தை கண்டித்து கோழிக்கோட்டில் கமிஷனர் அலுவலகத்தை பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதில் திரளாக பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் கலந்து கொண்டனர் மேலும் கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.அது போக கோழிக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்களில் காவல்துறை ரெய்டு செய்ததை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ சார்பாக போராட்டங்கள் நடைபெற்றது.
|
:கோழிக்கோட்டில் நடந்த முற்றுகை போராட்டம் |
|
கோழிக்கோட்டில் நடந்த முற்றுகை போராட்டம் |
|
கண்ணூரில் நடைபெற்ற கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் |
|
கண்ணூரில் நடைபெற்ற கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் |
|
கண்ணூரில் நடைபெற்ற கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் |
|
கண்ணூரில் எஸ்.டி.பி.ஐ நடத்திய ஆர்ப்பாட்டம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக