சனி, ஏப்ரல் 27, 2013

உ.பி., அமைச்சர் ஆஸம்கானுக்கு அமெரிக்க விமானநிலையத்தில் அவமதிப்பு!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உத்தரபிரதேச அமைச்சருமான ஆஸம்கான் அமெரிக்காவின் பாஸ்டன் விமானநிலையத்தில் அந்நாட்டு அதிகாரிகளால் கடுமையான சோதனைக்கு ஆளக்கப்பட்டார்.

உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஆஸம்கான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுடன், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தெற்கு ஆசியா குறித்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். அதற்காக அவர்கள் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்றனர்.
பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை துறை பெண் அதிகாரி இவர்களிடம் விசாரணை நடத்தினார். ஆஸம்கானை மட்டும் கடும் சோதனைக்கு உட்படுத்தி, தனியாக அழைத்துச் சென்று 10 நிமிடங்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஆஸம்கானுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு உருவானது.
இது குறித்த தகவல் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேசினர்.
இதனிடையே அமைச்சர் ஆஸம்கான் அவமதிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அரசிடம் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற அவமதிப்புகள் இந்திய தலைவர்களுக்கு அமெரிக்க விமான நிலையங்களில் தொடர்ந்து நடைபெறுவதும் பிறகு அதற்காக வருத்தம் தெரிவிப்பதும் தொடர் கதையாகி வருகின்றன.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக