திங்கள், ஏப்ரல் 22, 2013

சிரியா: அதிபர் படையின் தாக்குதலில் 80 பேர் பலி!

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும், போராளிகள் படைக்கும் இடையே கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் சண்டையில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ஜியாடெட் அல் பத்ல் என்ற நகரை சுற்றி வளைத்து அதிபர் படை தாக்குதல் நடத்தினர்.  கடந்த 5 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த மோதலில் போராளிகளின் படை மிகப்பெரும் சேதத்தை சந்தித்தது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட போராளிகள் 80 பேர் கொல்லப்பட்டனர். 

தெற்கு மற்றும் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் தலை தூக்கிய போராளிகளை ஒழித்துக்கட்ட அதிபர் படை இந்த தாக்குதலை நடத்தியதாக சொல்லப்படுகிறது. 

மேலும் அப்பகுதியில் 250 மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக