- கணினி வழி விபசாரத் தொழில் நடத்தி மாதம் சிங்கப்பூர் டாலர் $200,000 சம்பாதித்த ஒரு கும்பலில், தன்னுடைய கணவருக்கு உதவிய ஒரு மாதுக்கு நேற்று 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
- சார்லின் பாங் சியூ டிங், 26, என்ற அந்த மாதுக்குச் சென்ற டிசம்பரில் தண்டனை விதிக்கப்பட இருந்தது. ஆனால் அந்தத் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. அந்த மாதின் கணவருக்கு ஏற்கனவே ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் அத்தண்டனையை அனுபவித்து வந்தார்.
-
- தண்டனையைக் கணவர் அனுபவித்து முடிப்பதற்கு ஏதுவாக மனைவிக்கு விதிக்கப்பட இருந்த தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தம்பதிக்கு 3 வயதில் ஓர் ஆண் குழந்தை உண்டு. அந்தப் பையனைப் பார்த்துக்கொள்ள யாருமே இல்லை என்று இந்தப் பெண்மணி நீதிமன்றத்திடம் விண்ணப்பத்திருந்தார்.
- கணவரான லியூ கூ ஃபெங் என்ற 34 வயது ஆடவர் இந்த மாதத் தொடக்கத்தில் சிறையிலிருந்து விடுதலை ஆனார். விபசாரம் மூலம் கிடைத்தப் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தியதாக இந்த இரண்டு பேரும் டிசம்பரில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இந்த இருவரும் சம்மந்தப்பட்டிருந்த விபசாரக் கும்பல், நான்கு கணினி இணைய தளங்களை நிர்வகித்து நடத்தியது என்று நீதிமன்றத்தில் விசாரணையின்போது தெரிவிக்கப் பட்டது.
வியாழன், ஏப்ரல் 18, 2013
சிங்கப்பூரில் இணையம் வழி விபசாரத்திற்கு துணைபோனவருக்கு சிறை !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக