புதன், ஏப்ரல் 17, 2013

தேசிய முன்னணி வேட்பாளர்களில் பலர் புதியவர்கள் !

  • மலேசிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று  அறிவிக்கப்படவுள்ளது. பதினான்கு மாநிலங்களில் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்களின் பெயர்கள் இன்று ஒரே சமயத்தில் அறிவிக்கப் படவுள்ளன. 
  •  
  • இந்நிலையில் நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிடும் தேசிய முன்னணி வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 33 விழுக்காட்டினர் புதியவர்கள் என்று மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். 
  •  
  • சட்டமன்ற இடங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் பாதிப்பேர் அதாவது 49 விழுக்காட்டினர் புதியவர்கள் என்றும் நஜிப் கூறினார். தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுடன் பல தடவை பேச்சு நடத்திய பிறகு சிறந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்திருப்பதாகவும் பிரதமர் கூறினார். 
  •  
  • புதியவர்களைத் தேர்வு செய்யும்போது அனுபவம் மிகுந்த வர்களும் அரசாங்கத்தில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளும் வகையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்த தாகவும் அவர் சொன்னார். “வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்படாதவர்கள் அடையும் ஏமாற்றத்தைவிட மக்களின் ஏமாற்றம் குறித்தே நான் அதிக கவலைப்படுகிறேன்,” என்று பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக