பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மரக்காணம் கலவரம் தெடர்பாக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதுதொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, “பத்து மணிக்குள் கூட்டத்தை முடித்துக் கொள்வதாக விழா அமைப்பாளர்கள் உறுதி அளித்திருந்த போதும், இவ்விழாவில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. ராமதாஸ் பேசும் போது, ‘11½ மணிக்குப் பேசறேன் - போடு வழக்க. அதெல்லாம் நமக்குக் கவல கிடையாது’ என்று கூறியுள்ளார். பத்து மணிக்குள் விழாவை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை உதாசீனப்படுத்திய ராமதாஸ் அவர்கள் மீது ‘வழக்குப் போடுங்கள்’ என்ற அவரது கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக் கொண்டு, நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை அவர் ஏற்றுக் கொள்வார் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக