அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடிற்காக இந்தியா, வெளிநாடு நாணய மாற்று ஒழுங்குச் சட்டத்தில் (Foreign Exchange Regulation Act) திருத்தம் கொண்டுவந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் மீதேல் ஐஸோசயனைட் ப்ளாண்டை நிறுவது தொடர்பாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிந்து ஃபெரா(FERA) சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. 1970களில் போபாலில் தொழிற்சாலையில் ப்ளாண்டை நிறுவ, யூனியன் கார்பைடு நிறுவனம் தீர்மானித்தது. மூலதன முதலீடு தொடர்பாக ஃபெரா சட்டத்தின் பிரிவுகள் அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாற்றமாக அமைந்திருந்தது. இதில் மாற்றம் கொண்டுவர அமெரிக்கா தீர்மானித்தது. அரசுக்கு நிர்பந்தம் அளிக்க கோரி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மேலாளர்கள் அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டனர் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகிறது.
யூனியன் கார்பைடு நிர்வாகி, இந்தியாவில் அமெரிக்க தூதராக இருந்த டானியல் பாட்ரிக் மொய்னிஹானிடம் நிதி அமைச்சர் மீது அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் கூறுகிறது.
அமெரிக்காவின் தலையீட்டை தொடர்ந்து 1975-ஆம் ஆண்டு அரசு ஃபெரா சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததுடன், மீதேல் ஐஸோசயனைட் அடிப்படையாக கொண்டு 5000 டன் கிருமி நாசினியை உற்பத்திச் செய்வதற்கான உரிமையும் வழங்கியது. அன்று வரை அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்படாத தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1979-ஆம் ஆண்டு மீதேல் ஐஸோ சயனைட் ப்ளாண்ட் நிறுவப்பட்டது என்று விக்கி லீக்ஸ் ஆவணம் கூறுகிறது.
1976-ஆம் ஆண்டு காலவேளையில் தொழிற்சாலையின் இதர ப்ளாண்டுகளில் வாயுக்கசிவுகள் குறித்து செய்திகள் வெளியாகின. 1981-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து வந்த அதிகாரிகள் ப்ளாண்டில் கடுமையான பிரச்சனைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர். ப்ளாண்டில் வெடித்து சிதறுவது வழக்கமாக இருந்தன. ஏராளமானோர் இவ்விபத்துக்களில் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்துதான் 1984-ஆம் ஆண்டு உலகை நடுக்கிய மாபெரும் விபத்து நிகழ்ந்தது.10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்று துயரத்துடனேயே வாழ்க்கையை கழிக்கின்றனர்.
நன்றி : நியூ இந்திய
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக