வியாழன், ஏப்ரல் 18, 2013

காலை 7.45க்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இலவச ரயில் பயணம் !

  • சிங்கப்பூரில் முன்னோடித் திட்ட மாக இலவச ரயில் பயணம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் ஜூன் 24ம் தேதியி லிருந்து காலை 7.45 மணிக்கு முன்பு சில நிலையங்களிலிருந்து வெளியேறும் பயணிகள் இலவச மாகப் பயணம் செய்யலாம். 
  •  
  • அதே சமயத்தில் காலை 7.45 மணிக்கும் காலை 8.00 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் வெளியாகும் பயணிகளுக்குக் கட்டணத்தில் 50 காசு சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. 
  •  
  • உச்ச நேரத்தில் நெரிசலைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு கட்டமாக இந்த இலவசப் பயணம் இடம்பெறுகிறது. ராபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்தில் பேசிய போக்கு வரத்து அமைச்சர் லுயி டக் இயூ நேற்று இந்த முன்னோடித் திட்டத்தை வெளியிட்டார். சிட்டி ஹால், ராபிள்ஸ் பிளேஸ், கிளார்க் கீ, பூகிஸ், சைனா டவுன், டோபிகாட், லெவண்டர், ஆர்ச்சர்ட், ஊட்ரம் பார்க், சாமர்செட், தஞ்சோங் பகார், பேஃபிரண்ட், பிராஸ் பசா, எஸ்பிளனேட், மெரினா பே, பிராமினட் ஆகிய எம்ஆர்டி நிலையங்களில் இந்த இலவசப் பயணம் அமுல்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக