- அமெரிக்காவின் டெக்சாஸ்
மாகாணத்தில் வாகோ நகருக்கு அருகில் உள்ள உரத்தொழிற்சாலையில் இன்று அதிகாலை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீ அருகில்
இருந்த பல கட்டிடங்களுக்கும், வீடுகளுக்கும் மளமளவெனப் பரவியது. இந்த
கட்டடங்களில் பலர் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்தப் பணியில் 6 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இது தற்செயலாக நிகழ்ந்த விபத்தா அல்லது சதியா எனறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைக்கு அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே பாஸ்டன் நகரில் நடந்த குண்டுவெடிப்பினால் அமெரிக்காவில் பதட்டம் உள்ள நிலையில் மீண்டும் ஒரு விபத்து குறித்த அச்சம் தலை தூக்கியுள்ளது.
வியாழன், ஏப்ரல் 18, 2013
அமெரிக்காவில் உரத்தொழிற்சாலையில் வெடிவிபத்து !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக