வியாழன், ஏப்ரல் 18, 2013

புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு !

  • நாடெங்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் வாக்காளர் அடையாள அட்டைகள், காகிதத்தின் மீது 'லேமினேஷன்' செய்யப்பட்டவையாக உள்ளன.

    இவை நாளடைவில் சேதமாகி விடுகின்றன. இந்நிலையை போக்கும் வகையில் டிரைவிங் லைசென்ஸ், வருமான வரி கணக்கு அட்டைகளைப் (பேன் கார்ட்) போன்ற வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க இந்திய தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.

    தற்போதைய அடையாள அட்டைகளை தயாரிக்க அட்டை ஒன்றுக்கு ரூ.10 முதல் 12 வரை அரசுக்கு செலவாகிறது. வண்ண புகைப்படத்துடன் கூடிய தரமான பிளாஸ்டிக் அடையாள அட்டைகளை தயாரித்து வாக்காளர்களிடம் ரூ.50க்கும் குறைவான தொகையை கட்டணமாக பெற தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

    இத்தகைய நவீன அட்டைகள், அசாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் முதன் முறையாக வழங்கப்படும். விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் அலோக் சுக்லா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக