புதன், ஏப்ரல் 24, 2013

பிரான்ஸ் தூதரகம் மீது தாக்குதல்!

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் பிரான்ஸ் தூதரகம் மீது கார் குண்டு மூலம் தாக்குதல்நடத்தப்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். லிபியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பென்காசி நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு மீண்டும் லிபியாவில் வெளிநாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. தலைநகர் திரிபோலியில் கர்காரஷ் பகுதியில் 2 மாடி கட்டிடத்தில் பிரான்ஸ் தூதரகம் செயல்படுகிறது. இந்த அலுவலகம் மீது நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.
தூதரகத்தின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்தது. ரிமோட் மூலம் இதை இயக்கியுள்ளதாக தெரிகிறது. இதில் தூதரகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தூதரக கட்டிடத்துக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் பலத்த சேதமடைந்தன. சாலையில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு சேதம் ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியது.
இச்சம்பவத்துக்கு தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கும் என்று கூறிய லிபிய வெளியுறவு அமைச்சர் முஹமது அப்துல் அஜீஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றார். துதரகம் மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் ஹாலண்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நன்றி : நியூ இந்திய 
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக