ஆபாச இணையதளங்கள் அதிகரிப்பு:மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
-
புதுடெல்லி:இந்தியாவில் ஆபாச இணையதளங்கள் அதிகரித்துள்ளது குறித்து மத்திய
தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
இந்தியாவில் ஆபாச இணையதளங்களை தடை செய்ய
வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முக்கியமாக சிறார்களைக் கொண்டு எடுக்கப்படும் ஆபாச படங்களைக் கொண்டுள்ள
இணையதளங்களும் சமூகத்தில் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்க
காரணமாக அமைகின்றன. சிறார்கள் பலர் இணையத்தை பயன்படுத்துவதால், இதுபோன்ற
இணையதளங்களை அவர்கள் பார்க்க வாய்ப்புள்ளது என்று அந்த மனுவில்
சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி அல்தமஸ்
கபீர் தலைமையிலான அமர்வு, இப்பிரச்னை தொடர்பாக கவலை தெரிவித்ததுடன், இது
தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு
நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக