திங்கள், ஏப்ரல் 15, 2013

பல முறை எச்சரித்தும் பெண் கலெக்டர்களை வர்ணித்த உ.பி. அமைச்சர் அதிரடி நீக்கம் !

  • லக்னோ, - பெண் கலெக்டர்களின் அழகை வர்ணித்த உத்தர பிரதேச அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநில அரசில் காதி துறை அமைச்சராக இருந்தவர் ராஜா ராம் பாண்டே. பிரதாப்கர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இந்த தொகுதிக்கு உட்பட்ட சுல்தான்பூரில் உள்ள கமலா நேரு தொழில்நுட்ப கல்லூரியில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் அமைச்சர் ராஜாராம், தற்போதைய கலெக்டர் தனலட்சுமி, முன்னாள் கலெக்டர் காமினி சவுகான் ரத்தன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    உதவித் தொகை வழங்கி அமைச்சர் ராஜாராம் பேசுகையில், Ôசுல்தான்பூரில் இருந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். பெண் கலெக்டர் தனலட்சுமி மிகவும் அழகானவர். அதே சமயம் நிர்வாக திறமை மிக்கவர். முன்னாள் கலெக்டர் காமினியும் மிக அழகானவர். இவரை போல் வேறு யாரும் அழகில்லை என்று நான் அடிக்கடி நினைப்பேன்.

    அழகான பெண்களுடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதுÕ என்று பேசினார். பொது நிகழ்ச்சியில் பெண் கலெக்டர்களை வர்ணித்து அமைச்சர் பேசியதை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சர்ச்சை எழுந்தது. இதுபோல் செக்சியாக பேச கூடாது என்று ராஜாராமை முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்தார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிரதாப்கர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், Ôமாநிலத்தில் உள்ள சாலைகளுக்கு Ôபேஷியல்Õ செய்வேன். அதன்பின் சாலைகள் எல்லாம் நடிகை ஹேமமாலினியின் கன்னம் போல் பளபளக்கும்Õ என்று கூறினார். அமைச்சர் ராஜாராம் தொடர்ந்து பெண்களின் அழகை வர்ணித்து  பேசுவதால் கட்சியின் மதிப்பு கெடுகிறது என்று  முதல்வரிடம் கட்சி பிரமுகர்கள் புகார்கள் கூறினர்.

    இதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து ராஜாராம் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜாராம் வகித்து வந்த காதி துறை முதல்வர் அகிலேஷ் யாதவே ஏற்றுக் கொண்டுள்ளார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக