வெள்ளி, ஏப்ரல் 12, 2013

உலக போர்க்களங்களில் அதிகம் பாதிக்கப்படுவது சிறார்களே!

உலகின் பல்வேறு போர்க் களங்களில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் அதிகமாக சிறார்களே பாதிக்கப்படுவதாக சேவ் த சில்ட்ரன் (save the children) என்ற அமைப்பு கூறியுள்ளது.

கொலம்பியா, லைபீரியா மற்றும் காங்கோ உட்பட கடந்த பத்து ஆண்டுகளில் மோதல்கள் நடந்த பல இடங்களில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த அமைப்பு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
ஜி 8 குழுவின் மாநாட்டின் போது பாலியல் வல்லுறவு குறித்த விவகாரத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரிட்டன் கூறியுள்ளது.
இத்தகைய வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவந்து அவற்றில் இருந்து சிறார்களை மீட்பதற்கான திட்டங்களுக்கு போதுமான நிதி கிடையாது என்று சேவ் த சில்ட்ரன் அமைப்பு கூறியுள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக