- அரக்கோணம்: பீகார் மாநிலத்திலிருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில் அரக்கோணம் அருகே சித்தேரி என்ற இடத்தில் தடம் புரண்டது. இதில் 2 பேர் பலியானார்கள். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- பீகார் மாநிலத்திலிருந்து முஷாபர்பூர் - பெங்களூர் யஷ்வந்த்பூர் விரைவு ரயில் இன்று காலை ஐந்தேமுக்கால் மணியளவில், அரக்கோணம் அருகே சித்தேரி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் 12 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கிய பயணிகள் அலறியபடி உதவி கோரினர்.
- உடனடியாக ஆம்புலன்ஸ்களும், மீட்புப் படையினரும் விரைந்து வந்தனர். விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரக்கோணம் அரசு மருத்துவமனை மற்றும் சித்தேரியி்ல் உள்ள மருத்துவமனைகள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
புதன், ஏப்ரல் 10, 2013
அரக்கோணம் அருகே ரயில் தடம் புரண்டது- 2 பேர் பலி !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக