- குஜராத் மாநிலத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள தலித்
இன மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அன்றாடம் அல்லல்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடி உயர் இன மக்களின் பிரதிநிதியாக
மட்டுமே செயல்படுகின்றார் என்பது இவர்களின் ஆதங்கமாக இருக்கின்றது.
இங்குள்ள சௌராஷ்டிரா மாவட்டத்தில் உள்ள சித்தாலியா, கட்வாவாடி, கணேசரா, பரிவாலா, ஜீவபூர், நாணி லக்காவதி, கொதி, பரவாலா மற்றும் தேவதாரி ஆகிய பத்து கிராமங்கள் வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களை ஊருக்குப் பொதுவான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் பிடிக்க மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி அருகே சென்றால் தலித் மக்களை சாதியைச் சொல்லி விமர்சிக்கிறார்கள். எனவே கொதிக்கும் வெயிலில் அப்பெண்கள் 3 கிமீட்டருக்கும் மேல் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
இந்தக் கஷ்டத்தையும், அவமதிப்பையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இம்மக்கள் அம்மாவட்ட இணை ஆணையரிடம் சென்று முறையிட்டனர். ஆனால், அதற்காக அவர்கள் மிரட்டப்பட்டனர். கீழ்சாதியில் பிறந்ததற்காக நாங்கள் தாகத்துடன் இருக்கமுடியுமா? என்று தலித் பெண்ணான ஜெயா மக்வானா கோபத்துடன் கூறுகிறார்.
ஆணையரிடம் முறையிட்ட பின்னர், நர்மதை நதி நீர் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை இவர்களின் கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. ஆனால், அளவு குறைவாக உள்ளதால் இதுவும் இவர்களுக்கு போதுமானதாக இல்லை.
புதன், ஏப்ரல் 10, 2013
குஜராத் மாநிலத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் தலித் மக்கள் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலம்மா ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக