வியாழன், ஏப்ரல் 11, 2013

வறட்சியை பார்க்க போன தமிழக அமைச்சர்களின் மதிய சாப்பாடு பில் ரூ87,020..!

  • சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியைப் பார்க்க சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவின் மதிய உணவு செலவு மட்டும் ரூ87ஆயிரத்து 20.. இதை உள்ளாட்சி அமைப்புகள் பகிர்ந்து கொண்டு டிடி அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார். 
  •  
  • போதுமான பருவமழை இல்லை.. இதனால் தமிழக மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வறட்சி நிவாரணக் குழு பார்வையிட்டு வருகிறது. 
  •  
  • இக்குழுவினர் கடந்த 16-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரத்துக்கு சென்றனர். சிவகங்கையில் இளையான்குடியில் மட்டும் வறட்சியை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினரின் மத்திய உணவு பில் தொகை ரூ87 ஆயிரத்து 20 என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 
  •  
  • இந்தத் தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை தலா ரூ2,417, நகராட்சிகள் தலா ரூ9,670 தொகையை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயருக்கு டிடி எடுத்து உடனே அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வறட்சியைப் பார்க்க போன அமைச்சர்களின் ஒருநேர சாப்பாடு பில் சுமார் 1 லட்சமா? என்னத்த சொல்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக