- Sashastra Seema Bal" (SSB) என்ற ராணுவப்பிரிவுக்கு ஆள் எடுப்பு முகாமில், பணியில்
சேர தேர்வுக்கு சென்ற முஹம்மத் நயீம் என்ற முஸ்லிம் வாலிபரையும், மேலும்
பல சான்றுகள் தேவைப்பட்டதால், அவருக்கு உதவுவதற்காக ஆவணங்களை எடுத்து சென்ற
அவரது நண்பர் இம்ரான் என்பவரையும் தீவிரவாத சந்தேக அடிப்படையில் கைது
செய்து, போலீஸ் விசாரித்து வருகிறது.
கோரக்பூர் ராணுவ "ஆள் எடுப்பு" தேர்வு முகாமுக்கு பொறுப்பு வகித்த "SSB" கமாண்டெண்ட் ஆர்.எஸ்.நேகி, நேற்று மதியம் 3.30 மணியளவில், முகாமில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும்படி இருப்பதாக கூறி, அவர்களை "சலாதால்" என்ற உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டம் போஜ் பூரை பூர்வீகமாக கொண்ட இவ்விரு முஸ்லிம் வாலிபர்களும், முராதாபாதின் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களில் இவர்கள் இருவரும் முஸ்லிம்கள் என்பதைத்தவிர மொபைல் போன் மூலம் முகாமை படம் பிடித்தனர்.
மேலும், பாகிஸ்தான் நாட்டின் ஒரு கரன்சி வைத்திருந்தனர், இவர்கள் பணிபுரியும் அரசு பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியரின் (Gazzetted Officer) சீல் (முத்திரை) ஒன்றும் வைத்திருந்தனர், என்பதே பிரதானமான குற்றச்சாட்டுக்களாகும்.
இவர்களை விசாரித்து வரும் "சலாதால்" காவல் நிலைய இன்ஸ்பெக்டர் "அஜய் குமார் ஓஜா" கூறுகையில்:
இவர்கள் இருவரும், தங்களை அப்பாவிகள் என கூறுவதாக தெரிவித்த அவர், மொபைல் மூலம் படம் பிடித்தது, சாதாரணமான நிகழ்வு என்றும், வெளிநாட்டு கரன்சி நோட்டுக்களின் மீதான தனது ஆர்வமிகுதியால் பாகிஸ்தான் கரன்சி ஒன்றை வைத்திருந்ததாகவும், தேர்வுக்கு வந்துள்ள தனக்கு ஏதாவது முத்திரையுடன் கூடிய சான்றுகள் (Attestation) தேவைப்படலாம் எனக்கருதி, தான் ஆசிரியர் என்ற நல்லெண்ண அடிப்படையில் தலைமையாசிரியரே கொடுத்தனுப்பியது, என்று விளக்கியதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள், ராணுவத்தில் ஊடுருவ வந்துவிட்டதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு மத்திய புலனாய்வு அமைப்புக்களின் உதவிகளை நாடியிருப்பதாக கோரக்பூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், போக்கு காண்பிக்கின்றனர்.
தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்கை கடைபிடிக்கும் இந்த பாசிச-காவி சிந்தனை படைத்த, அரச பயங்கரவாதிகள் குறித்து எங்கே போய் முறையிடுவது?
வியாழன், ஏப்ரல் 11, 2013
ராணுவ தேர்வுக்கு சென்ற "முஹம்மத் நயீம்" தீவிரவாத குற்றச்சாட்டில் கைது!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக