- மலேசிய தேர்தல் குறித்து இணையம் வாயிலாக வதந்திகள் அல்லது பொய்யான கருத்துகளைப் பரப்புவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டுப் போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இம்மாதிரியான பொறுப்பற்ற செயலில் இறங்குபவர்களால் பொதுமக்களிடையே குழப்பமும் அமளியும் ஏற்படும் என்று மலேசியப் போலிஸ் நேற்று அதன் அறிக்கையில் தெரிவித்தது. மலேசிய தேர்தல் மே 5ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளும் கட்சியை ஆதரிப்பவர்களும் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்களும் இணையப் போரில் மோதி வருவதாக மலேசிய தகவல் சாதனங்கள் தெரிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து அந்நாட்டுப் போலிசார் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- “பிரபல அரசியல்வாதி ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற பொய்யான கருத்து இரண்டு நாட்களுக்கு முன்பு இணையம் வழி பரப்பப்பட்டது. இந்தத் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை,” என்று மலேசிய போலிசின் செய்தித்தொடர்பாளர் ராம்லி முகம்மது யூசோஃப் தெரிவித்தார். இந்த வதந்திக் குறித்துப் போலிசிடம் புகார் செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
சனி, ஏப்ரல் 13, 2013
வதந்திகள் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை மலேசியா போலிஸ் எச்சரிக்கை !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக