வெள்ளி, ஏப்ரல் 12, 2013

வங்கதேசத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் கதி என்ன ஆனது ?

  • வங்கதேசத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 30 பயணிகள் பலியானார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வங்கதேசத்தில் பஸ் ஒன்று நேற்று 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பார்சால் ஆற்று பாலத்தை கடந்து சென்றது. திடீரென பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு பாலத்தை உடைத்துக்கொண்டு ஆற்றில் பாய்ந்தது. இதில் பஸ் பயணிகளுடன் தண்ணீரில் மூழ்கியது.

  • பஸ் தண்ணீரில் மூழ்கியதில் அதில் இருந்த 30 பயணிகள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நீச்சல் தெரிந்த 8 பேர் ஆற்றில் நீந்தி கரைக்கு வந்தனர். மேலும் மீட்பு படையினர் தண்ணீரின் ஆழத்திற்கு சென்று மூழ்கிய பஸ்சின் உள்ளே யாராவது சிக்கியுள்ளார்களா என்று தேடி வருகிறார்கள்.

    விபத்துக்குள்ளான பஸ்சில் 32 இருக்கைகள் மட்டும் உள்ளது. ஆனால் அதை விட அதிகமாக, 40 பயணிகள் வரை பயணம் செய்துள்ளனர். மேலும் தண்ணீரில் மூழ்கி இறந்தவர் சடலங்களை தேடும் பணி நடக்கிறது என்று போலீசார் கூறினர்.

  •  வங்கதேசத்தில் இது போன்ற பஸ் விபத்துக்குள்ளாகும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இதே போல் ஆன்மிக பயணம் மேற்கொண்ட பயணிகள் பஸ், காக்ஸ் பஜார் பகுதியில் ஆற்று பாலத்தை உடைத்துக்கொண்டு வறண்ட ஆற்றில் தலை கீழாக கவிழ்ந்தது. இதில் 17 பேர் இறந்தனர். வங்கதேசத்தில் பஸ்கள் பராமரிப்பின்றி உள்ளதாலும், டிரைவர்கள் பஸ்சை வேகமாக ஓட்டி செல்வதால் இது போன்ற விபத்து ஏற்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக