வெள்ளி, ஏப்ரல் 12, 2013

வட கொரியாவில் ஏவுகணை சோதனை! : தென்கொரியா, ஜப்பான் அபாய எச்சரிக்கை!

வட கொரியா விரைவில் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதால் தென் கொரியா 'பெரிய எச்சரிக்கை' என்பதைக் குறிக்கும் அபாய எச்சரிக்கை கொடியை ஏற்றி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் வடகொரியாவின் நிறுவனர் என்று போற்றப்படும், மறைந்த தலைவர் கிம் இல் ஷங்கின் பிறந்தநாளான வருகின்ற திங்கட்கிழமை அன்று ஏவுகணை சோதனை நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தூதரகங்கள், முக்கிய சுரங்க நிலையங்கள் உள்ளிட்ட 770 இடங்களில் ரோந்து காவல் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மற்றொரு அண்டை நாடான ஜப்பான், முன்னெச்சரிக்கையாக முக்கிய இடங்களில் ஏவுகணைகளை இடைமறிக்கும் அமைப்புகளை நிறுவியுள்ளது.
வடகொரியாவிற்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள சீனா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக