மதுரை : கின்னஸ் சாதனையாக தாமு என்று அழைக்கப்படும் தாமோதரனின் தலைமையில் 20 தோசை மாஸ்டர்கள் சேர்ந்து உலகின் மிக நீண்ட தோசையை உருவாக்கி உள்ளனர்.
இதற்கு முன் விஜயவாடா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட 38 அடி தோசை தான் மிக நீள தோசையாக இருந்தது. அரசு பள்ளிகூடங்கள் மற்றும் அனாதை இல்லங்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஒரு பகுதியாக மதுரை தமுக்கம் மைதானத்தில்
நடைபெறும் உணவு திருவிழாவில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.48 அடி நீள தோசையை தயாரிக்க 61 அடி தோசை கல் பயன்படுத்தப்பட்டது. தோசை கல்லின் எடை 900 கிலோ என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பெரும் தோசை தவாவிற்கான பர்னர்கள் சென்னையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டன. மொத்தத்தில் இத்தோசை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தோசை தவா உள்ளிட்ட அனைத்து உபகரணங்களின் மொத்த எடை 4000 கிலோவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக