சனி, பிப்ரவரி 04, 2012

ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான் !

ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்சிறிய செயற்கைக்கோள் ஒன்றை ஈரான் நாடு விண்வெளிக்கு அனுப்பியதாக அந்நாட்டின் ஊடக செய்திகள் தெரிவித்தன. இந்த செயல் அனைத்து மனிதர்களுக்கும் இடையே நட்புறவை வலுப்படுத்தும் என்று தான் நம்புவதாக இதனை துவக்கி வைத்த ஜனாதிபதி மஹமூத் அஹமதி நெஜாத் கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
மேலும்,  நவித்(அ)கோஸ்பல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வானிலை குறித்த தகவல்களை சேகரிக்கவும்,இயற்கை பேரழிவுகளை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 
110 பவுண்டு எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் ஒரு நாளைக்கு 15  தடவை கிரகத்தை சுற்றும் ஆற்றல் கொண்டது. ஈரான் பொறியியல் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த நவீன செயற்கைக்கோள் மூன்றாவது சிறிய செயற்கைக்கோள் ஆகும்.
 
இந்த செயற்கைக்கோள் இரண்டு மாதங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாபிர் என்ற ஏவுகணையின் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியில், வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சஹெளி மற்றும் ஈரான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கம்ரன் தநேஷ்ஜூ ஆகியோர் கலந்து கொண்டதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக