புதுடெல்லி : டெல்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் முற்றுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி வலியுறுத்தி, ஜனாதிபதி மாளிகையை பெண்களும், மாணவிகளும் நேற்று முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த ஞாயிறு இரவு
பஸ்சில் சென்ற 23 வயது மருத்துவ மாணவியை 6 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவனை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். 6வது குற்றவாளியும் சிக்கி விட்டான்.
பஸ்சில் சென்ற 23 வயது மருத்துவ மாணவியை 6 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவனை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். 6வது குற்றவாளியும் சிக்கி விட்டான்.
இதற்கிடையே, குற்றவாளிகளை அடையாளம் காட்டும் அணி வகுப்பு, டெல்லி திகார் சிறையில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்க முகேஷ் என்பவன் மட்டும் சம்மதித்தான். முகேஷை மாணவியின் உறவினர் சரியாக அடையாளம் காட்டினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை டெல்லி உயர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று தாக்கல் செய்தனர்.
குற்றவாளிகள் மீது கடத்தல், கும்பலாக பலாத்காரம் செய்தல், இயற்கைக்கு முரணான குற்றம், காயமடைய செய்து கொள்ளையடித்தல், உள்நோக்கத்தோடு தாக்குதல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டெல்லியில் கடந்த 5 நாட்களாக மாணவர்களும், பெண்கள் அமைப்பினரும் ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தி வருகின்றனர்.
பெண்கள், மாணவிகள் நேற்று ஆயிரக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். ராஜ்பத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணியாக வந்த இவர்கள், பலாத்காரத்துக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர், போலீஸ் தடுப்புகளை தாண்டி ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்றனர். ராய்சினா ஹில்ஸ் நுழைவாயில் வரை பேரணி சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசாரின் தடுப்பையும் மீறி ஸ்வாதி என்ற மாணவி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றார். அவரை அங்கிருந்த பாதுகாப்பு படையினர் திருப்பி அனுப்பி விட்டனர். ‘'ஜனாதிபதியை சந்தித்து எங்கள் கோரிக்கையை கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். அவரை சந்திக்க எதற்காக அனுமதி தேவை? அனுமதி வாங்கிக் கொண்டுதான் பெண்களை துன்புறுத்துகிறார்களா?'' என்று ஸ்வாதி ஆவேசத்துடன் கேட்டார். போலீசார் தடுத்ததால், பேரணி அங்கிருந்து இந்தியா கேட் நோக்கி சென்றது. ஒரு பிரிவினர், பாதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வரும் சப்தார்ஜங் மருத்துவமனை அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தூக்கு தண்டனை தர மகாராஷ்டிரா ஆதரவு :
நாக்பூர்: மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து சட்டமேலவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது, பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பெண் உறுப்பினர்கள் கோரினர். பின்னர், விவாதத்துக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல், ‘டெல்லியில் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது. பெண்களை மானபங்கம் செய்வதை ஜாமீனில் விட முடியாத குற்றமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளோம். இது போன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரிக்கிறேன்‘ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக