சனி, டிசம்பர் 22, 2012

அபுதாஹீரை விடுதலை செய்ய கோரி : தமிழக முதல்வருக்கு "தந்தி" அனுப்பும் போராட்டம் !

சிறுவனாக இருந்தபோது, குண்டுவெடிப்பு வழக்கில் பொய்யாக சிக்கவைக்கப்பட்ட அபுதாஹீர், 15 ஆண்டு சிறைக் கொடுமைகளால் "SLE" என்ற கொடிய நோயால் கிட்னி பாதிக்கப்பட்டும், இருதிய நோயாலும், கண் பார்வை குறைந்தும், தனது வாழ்நாட்களை எண்னிவரும் அபுதாஹீரை விடுதலை செய்யக்கோரி, அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் போராடி வருகின்றன.
அபுதாஹீர், ஒரு கொடிய குற்றவாளி போல் பூச்சாண்டி காட்டப்பட்டு வருகிறார். சிறை விதிகளின்படி, அதிகரிகளின் பரிந்துறையின் பெயரில் விடுதலை செய்யலாம். ஆனால், காவல்துறையும், உளவுத்துறையும் சிறிதும் மனிதாபிமானம் அற்று, அபுதாஹீரின் விடுதலைக்கு தடையாக இருந்து வருகின்றன.

உயர்நீதிமன்றம் "நீண்ட பரோல் விடுப்பு" கொடுத்து விடுதலை செய்ய உத்திரவிட்டால், காவல்துறையும் உளவுத்துறையும் நீதிமன்ற ஆனைகளை குப்பையில் தூக்கி போட்டுவிட்டு, விடுதலைக்கு தடையாக இருந்து வருகின்றன.
தமிழக அளவில் அபுதாஹீரின் விடுதலைக்காக அனைத்து  அமைப்புகளும் குரல் கொடுக்கும் வகையில், பல்வேறு போராட்டங்களையும் வேண்டுகோள்களையும் வைத்தும், தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க, இன்று (22.12.2012) காலை 10 மணி அளவில் அளவில், திருப்பூர் தந்தி அலுவலகத்தில் "தந்தி அனுப்பும் போராட்டம்" நடக்கிறது.
"இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்" போராட்டத்தை ஒருங்கினைத்துள்ளது.
இதில், மனித நேய மக்கள் கட்சி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், ஆதித்தமிழர் போரவை ஆகிய அமைப்புக்கள் கலந்துக்கொள்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக