தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி மண்டேலா மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜனாதிபதி ஜேக்கப் சூமா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா(வயது 94) உடல்நலம் பாதிக்கப்பட்டு 2 வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர், மண்டேலாவின் உடல்நிலை தேறி வருவதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஜனாதிபதி ஜேக்கப் சூமா பேசுகையில், மண்டேலாவின் நிலைமை அபாயகரமாகவே இருக்கிறது.
ஆனாலும் சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பு தருகிறார். எனவே சற்று சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக