உத்தரபிரதேசம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இந்து, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மாதம் இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக இந்துவின் பெற்றோர், அக்பர்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங், இச்சம்பவம் தொடர்பாக பைசாபாத்தில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றுகூறி இந்துவை பைசாபாத்திற்கு அழைத்துச் சென்றார். டி.ஜி.பி. அலுவலகத்துக்கு போகாமல், பைசாபாத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கிய அவர், இந்துவை மிரட்டி கற்பழித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் தன்னை பலவந்தமாக லாட்ஜில் அடைத்து வைத்து கற்பழித்த சம்பவத்தை, அம்பேத்கர் நகரில் உள்ள தனது தோழிக்கு செல்போன் மூலமாக இந்து 'மெஸேஜ்' செய்தார். மெஸேஜை படித்துப் பார்த்த தோழி, பைசாபாத் போலீஸ் சூப்பிரண்ட்டிடம் புகார் அளித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் தங்கியிருந்த லாட்ஜுக்கு சென்ற சூப்பிரண்ட், அரை நிர்வாண நிலையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்து, இந்துவை மீட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உபாத்யாயா என்பவரை விசாரணை அதிகாரியாக சூப்பிரண்ட் நியமித்தார்.
லாட்ஜுக்கு வந்து சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங்கின் பிடியிலிருந்து சூப்பிரண்ட் தன்னை மீட்பதற்கு முன்னதாக, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள உபாத்யாயாவும் தன்னை மான்சிங்குடன் சேர்ந்து கற்பழித்ததாக சூப்பிரண்டிடம் இந்து முறையிட்டுள்ளார்.
தன்னை கடந்த நவம்பர் மாதம் அம்பேத்கர் நகரில் கற்பழித்த கும்பல் மீதும், டிசம்பர் மாதம் 14ம் தேதி பைசாபாத் லாட்ஜில் கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங், விசாரணை அதிகாரி உபாத்யாயா ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவிற்கு இந்து தற்போது மனு அனுப்பியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக