செவ்வாய், டிசம்பர் 25, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய தலைவராக கே.முஹம்மது ஷெரீஃப் தேர்வு !

மலப்புரம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.இதில் புதிய தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது
ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக கேரளமாநிலம் மஞ்சேரியைச் சார்ந்த ஒ.எம்.அப்துல் ஸலாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதர நிர்வாகிகள் பின் வருமாறு:
பேராசிரியர் பி.கோயா (கேரளா) – துணைத் தலைவர்
எம்.முஹம்மது அலி ஜின்னா(தமிழ் நாடு), இல்யாஸ் முஹம்மது தும்பே(கர்நாடகா) – செயலாளர்கள்
முஹம்மது ஷஹாபுத்தீன் – பொருளாளர்
தேசிய செயற்குழு உறுப்பினர்கள்:
இ.எம்.அப்துற்றஹ்மான், ஹாமித் முஹம்மது, பி.என்.முஹம்மது ரோஷன், எம்.அப்துல் ஸமத், அனீஷ் அஹ்மத், மவ்லானா உஸ்மான் பேக், எ.யா முஹ்யத்தீன், வழக்கறிஞர் எ.முஹம்மது யூசுஃப், எம்.முஹம்மது இஸ்மாயீல் ஆகியோர் ஆவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக