செவ்வாய், டிசம்பர் 25, 2012

சுனில் ஜோஷியை கொன்றது ராஜேந்தர் சவுத்ரி !

புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி  மர்மமான  முறையில் கொலைச் செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு
தெரியாமலிருக்க சுனில் ஜோஷியை ஹிந்துத்துவா சக்திகள் கொலைச் செய்துள்ளனர்.
2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிகழ்ந்த மாலேகான் குண்டுவெடிப்பு, 2007 பெப்ருவரி மாதம் நிகழ்ந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு நிகழ்ந்த மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, 2007 அக்டோபரில் அஜ்மீர் தர்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு, 2008-ஆம் ஆண்டு மலேகானிலும், மொடாஸாவிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றை சதித்திட்டம் தீட்டியதில் ஜோஷி முக்கிய பங்கு வகித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதில் அஜ்மீர் தர்காவில் குண்டுவைப்பதற்கான திட்டம் வெற்றிப் பெற்றதில் ஜோஷிக்கும் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் போலீசார், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைதுச்செய்ததும், மக்களிடையே முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வளர்ந்ததும், ஜோஷிக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியது.தங்களின் பின்னால் புலனாய்வு ஏஜன்சிகள் வராததும், சதித்திட்டங்கள் தீட்டுவது, இயக்கத்தை வழி நடத்துவது ஆகியவற்றில் ஜோஷிக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியதோடு காரியங்களை எளிதாக கையாளவும்வழிவகுத்தது.இதனைத்தொடர்ந்து பலரிடம் ரகசியங்களை ஜோஷி
பகிர்ந்துகொண்டுள்ளான்.இதனை இயக்கத்தின் இதர தீவிரவாதிகள் அச்சுறுத்தலாககண்டனர். இதன் மூலம் ஜோஷியை கொலைச்செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

மத்தியபிரதேச மாநிலம் மோவ் பிரதேசத்தில் ஜோஷி கொலைச்செய்யப்பட்டான்.இதைப்போலவே பல்வேறு கொலைகள் நடந்துள்ளன.இதனைக்குறித்தும் என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது.தற்போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளில் தனது பங்கினை ராஜேந்தர்சவுத்ரி ஒப்புக்கொண்டுள்ளான்.சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வைக்கப்பட்டநான்கு குண்டுகளில் ஒன்றை வைத்தவன் ராஜேந்தர் சவுத்ரி ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக