திங்கள், டிசம்பர் 31, 2012

குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் !

புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்புகளையும், கொலைகளையும் நிகழ்த்திய ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கங்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய அறிவுஜீவிகளை தேடும் பணியை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தீவிரப்படுத்தியுள்ளது. குண்டுவைப்பதில் நிபுணர்களான ராஜேந்தர் சவுத்ரி, மனோகர்சிங் ஆகியோரை கைது செய்த என்.ஐ.ஏ, தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே ஆகியோரை விரைவாக பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இவர்களை கைது செய்தால் நாசவேலைகளின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட ஹிந்துத்துவா அறிவிஜீவிகளையும், சித்தாந்தவாதிகளையும் கைது செய்ய முடியும் என கருதுவதாக என்.ஐ.ஏ
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரக்காக பணியாற்றியவன் டாங்கே. எலக்ட்ரிகல் நிபுணரான ராம்ஜி கல்சங்கரா, ஹிந்துத்துவா பிரிகேடுகளுக்கு தேவையான குண்டுகளை தயாரித்துக் கொடுத்தவன் ஆவான். ஏராளமான இளைஞர்களுக்கு எலக்ட்ரிகல் நிறுவனங்களை துவக்க கல்சங்கரா உதவிச் செய்துள்ளான்.
டாங்கே, ஜோஷி, ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் அடங்கிய ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல்தான் பல்வேறு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் 2004 முதல் 2008 வரை வெடிக்குண்டு தாக்குதல்களுக்கு தலைமை வகித்தவர்கள் ஆவர். ஆனால், பாதுகாப்பு குறித்த பீதியால் டீம் லீடரான சுனில்ஜோஷியை ஹிந்துத்துவா கும்பல் கொலைச் செய்தது.
ஹிந்துத்துவா பிரிகேடின் சித்தாந்தவாதி சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட இன்னும் பல பெயர் வெளியில் வராத ஹிந்துத்துவா அறிவுஜீவிகளின் உத்தரவுகளை கீழ்மட்டத்தில் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் தாம் டாங்கேயும், ராம்ஜியும் ஆவர். இவர்களை கைது செய்தால் ஹிந்துத்துவா அறிவுஜீவிகளை குறித்த தகவல்கள் கிடைக்கும் என்று என்.ஐ.ஏ கருதுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக