சிரியாவில் முகாம்களில் தங்கியுள்ள அகதிகள் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சிரியா- துருக்கி எல்லைப் பகுதியில் லட்சக்கணக்கான அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு உணவு, குளிரை தாங்கவல்ல ஆடைகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் நிலவுகிறது. பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் தங்கியுள்ளனர். குளிரின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. மேலும் வெப்பத்தை ஏற்படுத்தவோ, சமைக்கவோ எரிபொருள்களும் இல்லாத நிலையில், முகாமில் போதிய அளவில் உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக