டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்மாணவியின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இதுவரை அந்த மாணவிக்கு 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.என்றாலும் அவர் உடல் நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே உள்ளது. போதையில் இருந்த குற்றவாளிகள் கம்பியால் தாக்கியதில், அந்த
பெண்ணின் சிறுகுடல் கடுமையாக சேதம் அடைந்தது. அதில் தொற்று ஏற்படாமல் இருக்க கடந்த புதன்கிழமை சிறுகுடல் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.இதனால் மாணவிக்கு ஜீரணசக்தி இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக ஸ்பூனில் கொஞ்சம், கொஞ்சமாக திரவ சத்து ஆகாரம் மட்டும் கொடுத்து வருகிறார்கள்.
பெண்ணின் சிறுகுடல் கடுமையாக சேதம் அடைந்தது. அதில் தொற்று ஏற்படாமல் இருக்க கடந்த புதன்கிழமை சிறுகுடல் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.இதனால் மாணவிக்கு ஜீரணசக்தி இல்லாமல் போய்விட்டது. இதன் காரணமாக ஸ்பூனில் கொஞ்சம், கொஞ்சமாக திரவ சத்து ஆகாரம் மட்டும் கொடுத்து வருகிறார்கள்.
கடந்த சனிக்கிழமை மாணவி சீராக மூச்சு விட்டதால் அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. ஆனால் நேற்று அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. இதையடுத்து மாணவிக்கு மீண்டும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று மாணவியின் உடலில் கிருமி தொற்று அதிகரித்து இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அல்ட்ராசவுண்ட்,சி.டி. ஸ்கேன் எடுத்து ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு எய்ம்ஸ் டாக்டர்கள் அறிவுரைப்படி மாணவிக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.அதில் மாணவி உடலுக்குள் அசுத்த ரத்தமும்,கெட்டநீரும் சேர்ந்து இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.
அந்த கெட்டநீரை உடனே அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.இதையடுத்து மாணவியின் வயிற்றில் ஒரு பகுதியை சிறிது வெட்டி வழி ஏற்படுத்திய அசுத்த ரத்தம் மற்றும் கெட்டநீரை வெளியேற்றினார்கள்.
மாணவியின் வயிற்று பகுதியில்,பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் அடுத்தடுத்து கிருமி தொற்று ஏற்பட்டப்படி உள்ளது.அந்த கிருமி தொற்றை கட்டுப்படுத்த டாக்டர்கள் மிக கடுமையாக போராடியபடி உள்ளனர்.இந்நிலையில் அவர் நேற்று வாந்தி எடுத்ததாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவரது உடல் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக