ஞாயிறு, டிசம்பர் 23, 2012

நான் உங்களுடன் இருக்கிறேன்: ஆர்ப்பாட்டம் செய்த பெண்களுக்கு சோனியா காந்தி வாக்குறுதி !

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் சட்டதிருத்தம் செய்ய வேண்டும என கேட்டும், ஆயிரக்கணக்கான மாணவ - மாணவிகள் நேற்று புதுடெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  அவர்களில் சிலர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினார்கள். நள்ளிரவு 12 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியேவந்த சோனியா காந்தி, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சுமார் 20 நிமிடங்கள் வரை பேசி, அவர்களது குறைகளையும் குமுறல்களையும் பொறுமையாக கேட்டறிந்தார். 

ஆர்ப்பபாட்டக்காரர்களுடன் சரிசமமாக தரையில் அமர்ந்து, அவர்களின் கோரிக்கையை கேட்ட சோனியா காந்தி, 'இந்த போராட்டத்தில் நானும் உங்களுடன் இருக்கிறேன். நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தில் எப்போது நீதி கிடைக்கும் என்பதை இப்போதைக்கு என்னால் கூற முடியாது. 

ஆனால், நிச்சயமாக நீதி கிடைக்கும்.' என்று ஆறுதல் கூறினார். மேலும், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சார்பாக, சில பிரதிநிதிகளை மீண்டும் இன்று சந்திப்பதாகவும் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக