இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் என்று அழைக்கப்படும் 6 நகரங்களில் பலாத்காரத்தில் மட்டுமின்றி சில்மிஷ வழக்குகளிலும் டெல்லிதான் முதலிடத்தை பெற்றுள்ளது.மொத்தமுள்ள ஆறு மெட்ரோ நகரங்களில்கடந்த 2011-2012 வரை, உள்துறை அமைச்சகம் எடுத்துள்ள புள்ளிவிவரத்தின் படி, 453 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு டெல்லி முதலிடம் பெற்றுள்ளது என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அதைத் தொடர்ந்து மும்பையில் 221 பாலியல் வழக்குகளும், பெங்களூரில் 97, சென்னை 76, ஐதராபாத் 59 மற்றும் கொல்கத்தாவில் 46 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும், கடந்த 2010 மற்றும் 2009களில் டெல்லியில் மட்டும் முறையே 414 மற்றும் 404 பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2010ல், மும்பையில் 194, பெங்களூரில் 65, சென்னையில் 47, ஐதராபாத்தில் 47 மற்றும் கொல்கத்தாவில்
32 பாலியல் பலாத்கார வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.இது மட்டும் அல்லாது, சிறுமிகள் மற்றும் பெண்கள் சில்மிஷம் செய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதிலும், 6 மெட்ரோக்களில் டெல்லி கடந்த 2011-12ம் ஆண்டு, 556 வழக்குள் பதிவு செய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
32 பாலியல் பலாத்கார வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.இது மட்டும் அல்லாது, சிறுமிகள் மற்றும் பெண்கள் சில்மிஷம் செய்யப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதிலும், 6 மெட்ரோக்களில் டெல்லி கடந்த 2011-12ம் ஆண்டு, 556 வழக்குள் பதிவு செய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
கடந்த 2010 மற்றும் 2009ம் ஆண்டுகளில் டெல்லியில் முறையே 550 மற்றும் 491 வழக்குகள் பதிவாகியுள்ளது. சில்மிஷ வழக்கில் 2011-12ம் ஆண்டில் டெல்லியை விட சற்று அதிகமாகி மும்பையில் 553 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மும்பையில் 2010ல் 475, 2009ல் 400 சில்மிஷ வழக்குகளும் பதிவாகி உள்ளது. கொல்கத்தாவில், 2011ல் 254, 2010ல் 226 மற்றும் 2009ம் ஆண்டு 201 சில்மிஷ வழக்குகள் பதிவாகி உள்ளது. பெங்களூரில் கடந்த 2011-12ம் ஆண்டில் 250, ஐதராபாத்தில் 157 மற்றும் சென்னையில் 73 சில்மிஷ வழக்குகளும் பதிவாகி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக