டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மண்ணில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை பொருட்படுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர். ஐ.நா என்னக் கூறினாலும் பரவாயில்லை. குடியிருப்புக்களை கட்டத்தான் செய்வோம்’ என்று நெதன்யாகு திமிராக
கூறியுள்ளார். இஸ்ரேலின் சானல்-2க்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு இதனை தெரிவித்தார். நேர்முகத்தின் முழுமையான பகுதி விரைவில் வெளியிடப்படும் என்று சானல்-2 அறிவித்துள்ளது. இம்மாதம் 3-ஆம் தேதி ஜெருசலத்தில் 1600 புதிய சட்டவிரோத கட்டிடங்களை கட்ட இஸ்ரேல் அனுமதி வழங்கியது. 1967-ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் பிரதேசங்களில் சட்டவிரோத குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பல்வேறு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு
தெரிவித்திருந்தன.
ஃபலஸ்தீனுக்கு ஐ.நா கண்காணிப்பு பதவி கிடைத்ததற்கு பழி தீர்க்கவே இஸ்ரேல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் கார்ல் பில்ட் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக