வெள்ளி, டிசம்பர் 28, 2012

விடுதலைப்புலிகளுக்கு 5 மில்லியன் ரூபாய் வழங்கினார் ராஜீவ்: விக்கிலீக்ஸ் அம்பலபடுதியது !

இந்திய - லங்கா உடன்படிக்கை கையெழுத்திட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படும் மாதாந்த வரி வருமானத்துக்காக நட்ட ஈட்டை தருவதற்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி இணங்கினார்.இந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இலங்கைக்கான அப்போதைய உயர்ஸ்தானிகர் கே.என் திக்சித் மற்றும் இந்திய பிரதமரின் பேச்சாளர் ஆகியோர் லண்டன் ஒப்சேவருக்கு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து லண்டன் ஒப்சேவரை கோடிட்டு இலங்கையின் பத்திரிகைகளும் இந்த இரகசிய உடன்படிக்கை செய்தியை பெரிதாக பிரசுரித்திருந்ததாக விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது.
1988ம் ஆண்டு ஏப்ரல் 5ம் திகதி இந்த தகவல் கொழும்பு அமெரிக்கா தூதரகத்தினால் ராஜாங்க திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலின்படி ராஜீவ் காந்தி மாதம் ஒன்றுக்கு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நட்டஈடாக இந்திய ரூபாய்களில் 5 மில்லியன்களை வழங்க இணக்கம் வெளியிட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக