திங்கள், டிசம்பர் 24, 2012

எகிப்தில் அரசியல் சாசனத்திற்கு அங்கீகாரம்! 64 சதவீதம் பேர் ஆதரவு! எதிர்கட்சியினர் அங்கீகரித்தனர்!

கெய்ரோ:எகிப்தில் புதிய அரசியல் சாசனத்திற்கான மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு வாக்காளர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 64 சதவீதம் வாக்காளர்கள் அதிபர் முஹம்மது முர்ஸியின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஷரீஅத் அடிப்படையிலான அரசியல்
சாசனத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இத்தகவலை இஃவானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இஃவானின் பிரதிநிதிகள் அளித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ அரசு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இம்முடிவை எதிர்கட்சியான நேசனல் சால்வேசன் ஃப்ரண்ட் அங்கீகரித்துள்ளது. தேர்தலை கண்காணித்த குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியாகும் என கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. ஆரம்ப கட்ட முடிவுகள் அரசியல் சாசனத்திற்கு ஆதரவாகும். அதேவேளையில் வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டி போராட்ட நடத்தப்போவதாக எதிர்கட்சியினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக